காதல் திருமணம் நடந்து 3 நாட்கள்தான் ஆகிறது மாப்பிளைக்கு நேர்ந்த கொடுமை..?? தந்தையே மகனுக்கு செய்த அக்கிரமம் ..?? நடுங்கவைக்கும் செயல் …

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணப்ப மற்றும் லோகேஷ் . இருவரும் சண்டை போட்டு வெட்டிக்கொண்டனர். இந்த இருவரும் வேறு வெளி நபர்கள் இல்லை தந்தை மகன். ஆம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி அடுத்து சானமாவு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(55). இவருக்கு லோகேஷ் மற்றும் மஞ்சுளா என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் இதில் லோகேஷ் 32 வயது ஆனவர். இவர் சென்னையில்வுள்ள ஒரு மொபைல் ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் .

இவர் கிருஷ்ணகிரியில் அதே சானமாவு பகுதியை சேர்ந்த கலா என்பவரை சில வருடங்களாக காதலித்து தற்பொழுது 3 நாட்களுக்கு முன்னாள் திருமணம் செய்து கொண்டார் . இந்த திருமணத்தில் பெற்றோருக்கு சம்மதிக்காததால் அவர்கள் வீட்டை விட்டு வெளி ஏறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இந்த 2 நாட்களாக லோகேஷ் சென்னைக்கு செல்ல வில்லை . லோகேஷ் தனது தந்தை கிருஷ்ணப்பாவிடம் அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்வர்.

இதனால் லோகேஷின் பெற்றோர் கிருஷ்ணப்ப மற்றும் தாய் ராதாம்மாள் மகள் மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்பு நேற்று இருவரும் சொந்த ஊரான சானமாவு பகுதிக்கு வந்தார்கள் .அப்பொழது பெற்றோர் வீட்டிற்கு வந்த தகவலை அறிந்து லோகேஷ் வீட்டிற்கு வந்து தந்தை கிருஷ்ணப்பாவிடம் மீண்டும் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளான். இருவருக்கும் இடையில் சண்டை அதிகமானது கோபத்துடன் லோகேஷ் அவனுக்கு அருகில் இருந்த உருட்ட கட்டையை எடுத்து தந்தை கிருஷ்ணப்பாவை தாக்கியுள்ளான்.

அதே உருட்ட கட்டையை கிருஷ்ணப்பா வாங்கி லோகேஷை அடித்து உள்ளார் .அதனால் இருவருக்கும் சண்டை அதிகமானது அதனால் கிருஷ்ணப்பா அடுப்பங்கரையில் உள்ள அரிவாளால் மகன் லோகேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். சம்பவ இடத்துலயே லோகேஷ் இறந்த பின்பு தந்தை கிருஷ்ணப்பா சானமாவு பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை சொல்லி சரணடைந்து உள்ளார். காவல்துறை அதிகாரிகளும் உடனே லோகேஷின் சடலத்தை மீட்டு கிருஷ்ணப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர் .