போலீசிடம் இருந்து தப்பிக்க 13 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர்..??கதிகலங்க வைத்த சம்பவம்..!!!

ஹொங்ஹொங்கில் சமீபகாலமாக கலவரம் நடந்து வருகிறது . அந்த கலவரங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் தண்ணீர் குண்டு வீச்சுகளை பயன்படுத்தி கலவரத்தை கட்டு படுத்துகிறார்கள் .ஆனால் அந்த போராட்டகாரர்கள் அவர்களும் பதிலுக்கு குண்டுகளை போலீசாரின் மீது வீசி கலவரத்தை அதிகப்படுத்துகிறார்கள். சில நாட்களாக இப்படி தான் இருக்கிறது .

கலவரம் செய்யும் ஒரு போராட்டகாரர் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கு உள்ள ஒரு yoho mall உள்ளே நுழைந்து விட்டார் .அந்த மாலில் எதிர்வரும் அனைவரையும் தள்ளிவிட்டு ஓடுகிறார் . எதிர்வரும் போலீசாரும் தள்ளிவிட்டு தப்பிக்க முயல்கிறார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக அந்த போராட்டக்காரர் வேகமாக ஓடியதில் அவர் இரண்டாவது மாடி உயரத்தில் இருந்து மாலின் கீழ் தலத்தில் குதித்தார்.

அவர் அந்த இரண்டாவது மாடி உயரம் குறைவாக இருக்கும் என்று நினைத்து குதித்து இருப்பார் போலும் .ஆனால் அந்த இரண்டாவது மாடியின் உயரம் 13 அடி உயரம் அதனால் அவர் தப்பிக்க முயன்று அவர் கீழே விழுந்ததில் பயங்கரமாக ஆபத்தாக அடிபட்டு விட்டது . அடிபட்ட அவரை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.