இதனால் தான் என்னுடைய திருமணத்தை வேண்டாம் என்று cancel செய்தேன் …?? பகிரங்க பேட்டி கொடுத்த பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா…

தான் நடித்த படத்தில் ஒரு பாடல் மூலம் உலக பிரபலம் ஆனவர் நடிகை
ராஷ்மிகா மந்தனா. ” இன்கேம் இன்கேம் காவாலி “அப்பாடலின் கதாநாயகி தான் இவர் . இவர் முன்னாள் காதலனின் ஒரு பேட்டி சில நாட்களுக்கு முன்னாள் பரபரப்பானது . கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த நடிகை நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார். இந்த ஒரு படத்தின் மூலம் தென் இந்திய முழுவதும் பிரபலமாகவும் பலபேரின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கனவு கன்னியாக திகழ்கின்ற ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தெலுங்குவில் இரண்டு படமும், கன்னடத்தில் இரண்டு படமும் நடித்து கொண்டு பிஸியாக இருக்கிறார் .மேலும் தற்பொழுது தமிழிலும் கால் பாதிக்க உள்ளார். மேலும் அவர் நடித்த முதல் படமான ‘கிரிக் பார்ட்டி’யில் அறிமுகமான நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் மீது காதல் கொண்டதால் தனது காதலை வெளிப்படுத்தினர் .மேலும் இருவரும் காதலித்தனர். மேலும் இருவரும் அந்த படம் எடுத்து முடிந்ததும் 2017 ஆம் ஆண்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது இருவருக்கும்.

அவர்களுக்குள் கருது வேறுபாடு காரணமாக அவர்கள் 2018 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆனால் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் கன்னட நடிகருமாகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கும் ரக்ஷித் ரெட்டிக்கும் எனக்கும் 2017 இல் நிச்சயதார்த்தம் நடந்தது . ஆனால் எனக்கு சினிமா துறையில் இல்லாதவரை தன் நான் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்டேன். ஆனால் நான் என் முதல் படத்திலேயே
நடிகர் ரக்ஷித் ஷெட்டி மீது காதலில் விழுந்ததால் என் எண்ணத்தை மாத்தி கொண்டேன் அதனால் தான் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடத்தினேன்.

நாங்கள் எங்கள் தொழிலை வளர்த்து கொள்வதற்காக திருமணத்திற்கு 2 ஆண்டுகள் தள்ளி போட்டோம் .ஆனால் எங்களுக்கு திருமணம் செய்து கொள்ள முடியாத நிலைமையில் படங்களில் பிஸியாக உள்ளோம் .சரி திருமணத்திற்காக படங்களை ரத்து செய்யலாம் என்றால் எங்களின் தயாரிப்பாளர்களை கஷ்டத்திற்கு உள்ளாகிவிடுவோம் என்ற ஒரு எண்ணத்தில் நான் திருமணத்தையே ரத்து செய்து விட்டேன் என்று கூறினார் நடிகை ராஷ்மிகா மந்தனா.