பிரிந்த இரண்டு மாணவர்கள் சந்திப்பின் பொழுது நேர்ந்த பயங்கர விபத்து ..?? கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தாய் அழைத்ததால் நேர்ந்த கொடூர சம்பவம்..!!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட்டது . இந்த தினத்திற்காக வெளி நாடுகளிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ படித்தோ அலல்து வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக இருக்கும் தான். இந்த பண்டிகையில் சில இளைஞ்சர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை இரவில் எடுத்து கொண்டு அதி வேகமாக உல்லாச பயணம் மேற்கொள்வதும் உண்டு.

இந்த பயணத்தில் சில விபத்துகள் ஏற்படுவதால் அரசு சில வருடங்களாக இந்த மாதிரி இருசக்கர வாகனங்களை வெளியே எடுத்து வேகமாக பண்டிகை சமயத்தில் வெளியே செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. அப்படியும் சில இளைஞ்சர்கள் நேற்று உத்தரவு மீறி வாகனங்களை ஒட்டி சென்ற பல இளைஞ்சர்ககிளை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர் . இப்படிபட்ட சூழலில் நேற்று துபாயில் வசித்து வரும் இரண்டு குடும்பத்தை சேர்ந்த இளைஞ்சர்கள் பயங்கரமான கார் விபத்தில் சம்பவ இடத்துலேயே இறந்து விட்டார்கள் .

இருவருமே இந்திய கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு இளைஞ்சர்களின் குடும்பங்களும் இந்திய கேரளாவை சேர்ந்தவர்கள் வேலைக்காக துபாயில் குடியேறினார்கள் . இதில் இறந்த இருவரும் ரோஹித் கிருஷ்ணகுமார் (19), சரத் குமார் (21). இதில் ரோஹித் கிருஷ்ணகுமார் (19) பிரித்தானியாவில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் படித்து வருகிறார். சரத் குமார் (21) அமெரிசிவில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் படித்து வருகிறார். இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக கல்லூரியில் விடுமுறை விடப்பட்டதால் தங்களது பெற்றோர்களை பார்க்க துபாய்க்கு வந்துவுளள்னர்.

இருவருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் வீட்டில் அழைப்பு வந்ததால் இருவரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக காரில் சென்ற பொழுது தீடிர் என்று விபத்துக்குள்ளானதினுள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் . இந்த துயரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இரண்டு குடும்பத்தினருக்கும்.