‘அரையாண்டு விடுமுறை’… ‘3-நாட்கள் பல்வேறு லாட்ஜில் அறை எடுத்து.. 11-ம் வகுப்பு மாணவிக்கு “கொத்தனாரால் நேர்ந்த” கொடுமை!

திண்டுக்கல்லில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை அதனால் அவளுடன் படித்த சகமாணவிகள் வீட்டிற்கு சென்று பார்த்த பெற்றோர்கள் அங்கும் வரவில்லை என்பதால் பயத்தில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொடைக்கானலில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த கொத்தனார் ஜீவா(24) என்ற இளைஞர் கொடைக்கானலுக்கு அருகில் உள்ள தாண்டி குடி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை கைது செய்த போலீசார்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் அந்த மாணவியுடன் நெருங்கி பழகி வந்த கொத்தனார் வேலை செய்யும் ஜீவா இந்த நிலையில் பள்ளியில் அறையாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியே சுற்றுலாவுக்கு செல்லலாம் என்று மாணவியை பேசி மயக்கி கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஊர்களில் அறை எடுத்து தங்கி மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜீவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.