4 வருடம் நித்தியானந்தாவுடன்.. ‘தங்கியிருந்த திருச்சி பெண்’… ‘மர்மமான முறையில் மரணம்’…! “குற்றத்தை அதிகரித்து செல்லும்” நித்தியானந்தா…?

திருச்சி அருகே உள்ள நாவலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீத இவர் 2010ம் ஆண்டு சேலத்தில் உள்ள நித்தியானந்தா தியான வகுப்பிற்கு சென்றார். பின்னர் அதன் தொடர்ச்சியாக மூன்று மதம் இடைவெளிக்கு பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா தியான குருகுல பள்ளியில் சேர்ந்து அங்கேயே தங்கி படித்து வந்தார்.

பின்னர் 2014ம் ஆண்டு தீடிர் என்று சங்கீத மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் அவரின் உடலை சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்டு கடைசி காரியங்கள் செய்யப்பட்டன.

பின்னர் சங்கீதாவின் பெற்றோர்கள் தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெங்களூர் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. பின்னர் பெங்களூர் போலீசார் இந்த வாழ்க்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி C.B.I-விடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைசக்கத்திடம் மனுஅளித்தனர்.

அதன் பேரில் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சங்கீதாவின் தாயார் உள்துறை செயலருக்கு தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தாவை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை நடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் உளத்தூரை அமைச்சகம் நித்யானத்தவை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.