” திருநங்கையின் விந்து ” தானத்தினால் 6 வருட சிகிச்சைக்கு பின் ” குழந்தை ” பெற்று எடுத்த திருநம்பி..?? அதிசய சம்பவம்..!! மகிழிச்சியில் திருநங்கை தம்பதிகள் …

பிரித்தானியாவில் திருநம்பி ஒருவர் அழகான பெண் பிள்ளையை பெற்றெடுத்தார் . அவருக்கு 6 வருட சிகிச்சைக்கு பின்னர் இந்த அற்புதம் நடந்தது. இதற்காக ஒரு திருநங்கை நண்பரின் விந்தணு தானம் பெற்று 6000 பவுண்டுகள் அத்தாவது 5,61,117.96 Indian Rupee செலவழித்தார்கள் . பிரித்தானியாவில் திருநங்கை தம்பதியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருநம்பி ரூபன் ஷார்ப்(39) மற்றும் 28 வயதான ஜே. பிறப்பில் பெண்ணான ரூபன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்படி சிகிச்சை மேற்கொண்டு தனது ஹார்மோன்களை எடுத்துக்கொண்டு.

மேலும் முகம் மற்றும் குரலில் உள்ள அனைத்தும் சிகிச்சைக்கு பின்னர் ஆண்பாலாக மாறியது .பெண்பாலாக பிறந்து ஆணாக உருமாறிய பின்னரும் அவரது கருப்பை நீக்கப்படவில்லை. கர்ப்ப கால அனுபவத்தையோ தாய்மையின் அனுபவத்தையோ பெறதாம் ஏங்கியதில்லை என கூறும் ரூபன், தனக்கு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்பது மட்டும் ஆசையாக உள்ளது என்று கூறினார். திருமண புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்துள்ள ரூபன், தொடர்ந்து டெஸ்டோஸ்டிரோன் மருந்து எடுத்துக் கொண்டார்.

மேலும் தனது ஆசையை துணைவர் ஜே விடம் தெரிவித்தார்.மேலும் கருத்தொற்றுமை எழாத பட்சத்தில் பிரியவும் ரூபன் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இது அனைத்திற்கும் ஜே ஒப்புகொண்டுவுள்ளார். குழந்தை பெறுவதற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக மாதவிடாய் ஏற்பட்டது எனவும் ரூபன் தெரிவித்து உள்ளார். இது தமக்கு மகிழ்ச்சி அளித்தது என்று கூறிஉள்ளார்.

ரூபனுக்கு IUI முறைப்படி மருத்துவரால் கருவை கருப்பைக்குள் செலுத்தப்படும் சிகிச்சை நடத்தப்பட்டது.இதற்காக திருநங்கை நண்பர் ஒருவரே தமக்கு விந்து தானம் அளித்ததாகவும் மேலும் இவருக்கு 3 முறை வித்து செலுத்த பட்டத்துக்கு மட்டுமே இவர்கள் 6000 பவுண்டுகள் செலவழித்தார்கள் என்றும் கூறப்படுகிறது.மற்றும் இவருக்கு ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனை செவிலியர்கள் உதவியுள்ளனர். மேலும் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது . இப்பொழுதுதான் நான் முழுமை அடைந்ததாக ரூபன் தெரிவித்தார்.