அப்பாவிற்காகத்தான் கவர்ச்சியாக நடித்தேன் …!! நான் கவர்ச்சிப்பெண்.. மனம்திறந்து பேசும் பிரபல நடிகையின் பேட்டி ..??

பிரபல டிவி சீரியல் நடிகை நீபாவின் வேதனையை பற்றி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கவலையுடன் பேசினார். சில வருடங்களுக்கு முன்பு எல்லாம் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்று தனியாக ஒரு கதாபாத்திரம் இருக்கும் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட நடிகைகள் இருப்பார்கள் அவர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி படங்களில் வாய்ப்பு வரும் .ஆனால் தற்பொழுதைய படங்களில் அந்த மாரி கவர்ச்சியாக நடிக்க வேறு கதாபாத்திரம் தேவையில்லை நடிகைகளையே அந்தமாதிரி கவர்ச்சியாக நடிக்க சொல்கிறார்கள் .

அதனால் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளுக்கு வேலை இல்லாமல் ஆகிவிட்டது. அப்படி கவர்ச்சியாக நடித்த நடிகைகளை பற்றி எதற்காக தவறாக பேசுகிறீர்கள் .அவர்கள் படங்களில் அப்படி கவர்ச்சியாக நடித்தால் அவர்கள் நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருப்பார் என்று எதற்காக தவறாக கருதி அவர்களை பற்றி அவதூறான வர்தகைளை சோசியல் வலைத்தளங்களில் பதிசெய்து அவர்களை இழிவு செய்கிறீர்கள் என்று நடிகை நீபா கவலையுடன் பேசினார்.

மேலும் அப்படி கவர்ச்சியாக நடிக்க ஒருவர் ஒத்துக்கொள்கிறார் என்றால் அவர்களில் குடும்ப சூழ்நிலை அப்படி ஒரு கஷ்டத்தில் இருக்கும் அவர்களுக்கு வேறு எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பார்கள் .அதனால் கவர்ச்சியான நடிகைகள் தவறு செய்பவர்கள் இல்லை இதற்கு எடுத்துக்காட்டாக நடிகை மும்தாஜ் படங்களில் கவர்ச்சி வேடம் போட்டாலும் அவரின் நிஜ ரூபத்தை நாம் பிக் பாஸ் வீட்டில் பார்த்தோம். அவர் எப்படி ஒரு குடும்ப குத்துவிளக்கு போல் இருந்தார் என்பதும் அவரது நற்குணங்கள் என்ன என்பதும் அவருடைய ஒழுக்கத்தையும் நாம் கண்குளிர பார்த்தோம் .

அதே போல் தான் நான் எனக்கு திருமணம் நடப்பதற்கு முன் எனப்பாவிற்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்தது அதனால் தான் அந்த சமயத்தில் என்கையில் பணமும் இல்லை உடனே கவர்ச்சி நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததும் நான் நடிக்க ஒப்பு கொண்டேன் .அந்த பணத்தை வைத்து தான் என்அப்பாவின் மருத்துவ செலவை நான் பார்த்துக்கொண்டேன் .

ஆனால் தற்பொழுது எனக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தையும் உள்ளது எனக்கு பணக்கஷ்டமும் இல்லை அதனால் நான் நடிப்பதிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கிறேன் என்று சொல்லி நான் அந்தமாதிரி நடித்ததற்கு எனக்கு ஒரு காரணம் இருந்தது போல் மற்றவர்களுக்கும் ஒரு கரணம் இருந்து இருக்கும் .அதனால் இனிமேல் தயவு செய்து எந்த ஒரு கவர்ச்சி நடிகைகளும் தவறாக பேசாதீர்கள் என்று கவலையுடன் பேசினார் நடிகை நீபா.