பறக்கும் விமானத்தில் “தாயை துரத்தும் பேராபத்து”… ‘புத்திசாலித்தனமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய’..? 6 வயது மகள்…!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் லண்டனில் இருந்து கீரீன்ஸ் நாட்டிற்கு மகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அலெஸ்ஜின்ரா ஏஜிபலிஸ் என்ற தாய் மற்றும் 6 வயதுடைய ஜெய்டீன் என்ற மகளும் விமானத்தில் பயணித்தனர். விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் அலெஸ்ஜின்ராவிற்கு வலிப்பு வந்து இருக்கையில் சாய்ந்தார்.

இதனை யாரும் கவனிக்காத நிலையில் மகள் ஜெய்டீன் பார்த்து கத்தி கூச்சலிட்டாள் இதனால் விமான ஊழியர்கள் உடனே விமானத்தை தரை இறக்கி மருத்துவமணையில் அலெஸ்ஜின்ராவை சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அலெஸ்ஜின்ராவிற்கு நரம்புகளில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு தற்போது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

தற்போதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அலெஸ்ஜின்ரா.அவர் கூறுகையில் என் மகளை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. அவள் அன்று சரியான நேரத்தில் என்னை கவனித்து அருகில் உள்ளவர்களை அழித்தார் இல்லை என்றால் நான் கடந்த வருடமே இருந்திருப்பேன். என்று கூறினார் மேலும் இன்னும் சில மாதத்திற்குள் குணமடைந்து வீட்டிற்கு செல்வேன் என்று கூறினார்.