பிரபல டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் தேன்மொழி பி.எ. ஊராட்சி மன்றம் என்ற தொடரில் நாயகியாக இருப்பவர் கலக்கபோவது யாரில் இருந்த தொகுப்பாளினி ஜாக்களின். இவருக்கு தங்கையாக நடித்தவர் கலக்கபோவது யார் சீசன் 6 இல் இருந்த அஞ்சலி பிரபாகரன் . இவர் தற்பொழுது அந்த சீரியலில் விட்டு விலகிவிட்டார் அதற்கு காரணம் இவரது முகத்தில் மெச்சூரிட்டி இல்லாமல் இருந்ததினால் தான்.

அதனால் இவர் தனது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் . இவர் தனது காதலன் பிரபாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் ஆசிர்வாதத்துடன் கோவில் கர்பகிரஹத்தின் முன் நின்று காதலனுடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த வீடியோ காட்சி சோசியல் வலைதளபகுதியில் வைரலாகி வருகிறது . இந்த ஜோடிகள் டிக் டொக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து லட்சக்கணக்கில் பாலோவர்ஸ்களும் உள்ளனர். அதனால் இவரது திருமணத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.