உண்மையான அன்பை பார்க்கணுமே இந்த வீடியோவை பாருங்க ..!! ‘வேற லெவல் இது’ .. பார்த்தவுடனே கண்ணீர் வழியும் …

சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பெற்றோர்களுக்கு தான் அதன் உண்மையான அர்த்தம் புரியும் என்று தெரிவித்தவுள்ளனர். ரெஸ்டாரண்ட் ஒன்றில் அம்மா,அப்பா,மகள் என மூவரும் சாப்பிட அமர்ந்து இருக்கிறாரகள் .அப்பொழுது அங்கு வெயிட்டர் அப்பாவிடம் மெனுகார்டை கொடுக்கிறார் ஆர்டர் வாங்குவதற்காக ஆனால் அப்பாவோ அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் மக்களிடம் பேசுகிறார் .

ஆனால் அம்மாவோ அந்த வெயிட்டர் உற்று பாக்கிறாள் பிறகு திடீர் என்று தனது மகனை பெயரை கத்தி கூப்பிடுகிறாள் . அம்மா கூப்பிட சந்தோஷத்தில் அந்தவெயிட்டர் தனது தலையில் இருக்கும் தொப்பியை கழற்றி பார்க்கிறார். அதனை அப்பா மற்றும் மகள் பார்த்தவுடன் அனைவரும் அவர்களது மகன் பெயரை சொல்லி அழைத்து உடனே அந்த நபரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்.வெயிட்டராக வந்த நபர் வேறு யாரும் இல்லை அவர்களது மகன் தான்.

ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் தற்பொழுது சொந்த நாட்டிற்கு வந்து பெற்றோருக்கு சர்ப்ரைஸ் குடுக்க அவர்கள் வந்த ரெஸ்டாரண்ட்க்கு வந்து வெயிட்டர் போல் வேடமிட்டு முன் வந்து நின்று இருக்கிறார். அம்மாவின் உண்மையான அன்பு அவனை அடையாளம் கண்டது .