காதலனுடன் சேர்ந்து செய்த செயல்…?? கணவனுக்கு நேர்ந்த பரிதாபம் ..?? மனைவி நாடகமாடிய பின்னணி …

விருதுநகர் மாவட்டம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா . இவருக்கு திருமணம் பந்தம் முறிந்து விவாகரத்து ஆகிவிட்டது மேலும் இவர் தனது சகோதரியின் மகள் முத்துவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களுக்கு திருமணம் நடந்து 11 வருடம் ஆகிய நிலையில் இளையராஜா வெளிநாட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார் .இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வருவார்.

அப்படி கடந்த 2016 செப்டம்பர் 15 ஆம் தேதி வந்த இளையராஜா காணவில்லை என்று அவரது மனைவி முத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார் . மேலும் இளையராஜாவை எங்கு தேடியும் கிடைக்க வில்லை இப்படியே காலங்கள் உருண்டன ஆனால் போலீசாருக்கு மனைவி முத்துவின் மீது சந்தேகம் வந்ததால் அவர்கள் அவளை கண்காணித்து வந்தனர் .அதில் முத்துவின் தொலைபேசியை வைத்து பார்த்ததில் முத்து மணிகண்டன் என்கிற நபருடன் அதிகமாக பேசி இருப்பது தெரியவந்தது .

அதனால் அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்ததில் உண்மை வெளிவந்து உள்ளது. மணிகண்டன் என்பவர் முத்துவின் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர். அவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிபவர். மேலும் முத்துவும் மணிகண்டனும் நட்பாக அறிமுகமானவர்கள் இறுதியில் காதலர்களாக மாறி உடல்வுரவில் ஈடுபடும் அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் .

இளையராஜா ஊரில் இருந்து வந்த பொழுது அவருக்கு உண்மை தெரியவந்ததால் அவர் இவர்களை கண்டித்து உள்ளார். அதனால் கோபம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்கள் முத்து கருப்பன் மற்றும் கருப்பசாமியை அழைத்துக்கொண்டு இளையராஜாவை கொன்று விட்டு யாருக்கும் தெரியாமல் மணிகண்டனின் சொந்த கிராமத்துக்கு கொண்டு சென்று நடுகாட்டில் புதைத்து விட்டனர்.

மேலும் போலீசார் கங்காணிப்பதை முத்து மணிகண்டனிடம் தெரிவித்ததால் .இளையராஜா புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சேகரித்து வைகை ஆற்றில் போட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தற்பொழுது இருவரையும் கைது செய்து போலீசார் ஜெயிலில் அடைத்து உள்ளனர்.