மகள் சொன்ன வார்த்தைகள் ,,??? மனைவியின் பிரிவு ,,,?? கண்ணீருடன் உண்மையை பேசிய பார்த்திபன்….

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தன் வாழ்க்கையை பற்றி சொல்லி கண்ணீர் விட்டார் . நடிகர் பார்த்திபனுக்கும் நடிகை சீதாவிற்கும் காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் அதில் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முதல் மகள் அபிநயா , இரண்டாவது மகள் கீர்த்தனா மற்றும் மகன் . இவர்களை அவர் இவர்கள் என்னுடைய உயிர் , அறிவு மற்றும் பாசம் என்று சொல்லி அழைப்பாராம் . அவருக்கும் நடிகை சீதாவிற்கு நீண்ட நாட்கள் வழக்கை பயணம் இருந்தது . ஆனால் யார் கண்திருஷ்டி பட்டதோ தெரியவில்லை இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதனால் சீதா பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது சுரேஷ் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . காதல் மனைவியின் பிரிவை தாங்காமல் நடிகர் பார்த்திபன் நொடிந்து விட்டார் .ஆனால் அவரின் மகள் கீர்த்தனாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருக்கு வாழ்கையில் ஒரு மாறுதல்களை தந்தது. அது தான் அவர் மீண்டும் திரைவுலகிற்கு நடிக்க அனுப்பியது என்று தெரிவித்தார். மேலும் அவரது மகள் கீர்த்தனாவின் திருமணத்தன்று நான் அழக்கூடாது என்று ஒரு மாதமாக பயிற்சி மேற்கொண்டு இருந்தேன்.

ஆனால் என்னால் அப்படி இருக்க முடிய வில்லை நான் அழுதுவிட்டேன் .என்னால் அவள் பிரிவை ஏற்றுக்கொள்ள ரொம்ப கடினமாக இருந்தது என்று வருத்தத்துடன் பேசினார். மேலும் அவர் மனைவி சீதாவை பற்றி பேசும் பொழுது நான் அவளை என்வுயிர்க்கும் மேலாக காதலித்தேன் அவளை பல வார்த்தைகள் சொல்லி வர்ணிப்பேன். மேலும் நான் எவ்வளவு விருதுகள் பெற்றாலும் அவள் காலடியில் அதனை சமர்ப்பித்து இது அனைத்தும் உன்னடி சமர்ப்பணம் என்று சொல்லி புகழ்வேன் நான். அப்படி இருந்ததால் தானோ என்வாழ்கை இப்படி மாறிவிட்டது என்று சொல்லி கண்ணீர் விட்டார் .மேலும் நான் என் மகள்கள் மற்றும் மகன் தான் என் உலகம் என்று வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.