” கணவன் கண்முன்னே கடத்தப்பட்ட மனைவி ” ..?? அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த கொடூரம் ..???பரபரப்பு சம்பவம் …

திருமணமான இளம் பெண்ணை கணவர் மற்றும் பெண்ணின் சகோதரர் கண் முன்னே கடத்தி சென்ற துயரத்தில் பெண்ணின் தந்தை உயிர் இழந்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் இவருக்கு 52 வயது ஆகிறது இவரது மகள் தான் ஷோபா இவருக்கு கடந்த 6 நாட்கள் முன்பு தான் திருமணம் நடந்தது .இந்நிலையில் ஷோபா தன் கணவர் மற்றும் தன் சகோதரனுடன் வெளிய சென்று உள்ளார் .

அப்பொழுது ஷோபாவின் வீட்டு அருகில் இருக்கு மோனு (25) என்கிற இளைஞ்சர் சாலையில் நின்று கொண்டு இருந்த அவர்களிடம் ஷோபாவிடம் நான் தனியாக பேசவேண்டும் என்று சொல்லி ஷோபாவை கொஞ்ச தூரம் அழைத்து கொண்டு சென்றான் .அப்பொழது இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டு பின் கணவர் மற்றும் சகோதரர் கண் எதிரே மோனு ஷோபாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றான் .இதனை தடுக்க முயலாத ஷோபாவின் கணவர் மற்றும் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் ஷோபாவின் தந்தை கிஷோரிடம் இந்த தகவலை தெரிவித்ததுடன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கபட்டார். மேலும் சிகிச்சை பலன் இன்றி கிஷோர் மகளின் பிரிவினால் உயிர் இழந்தார். மோனுவை தேடி ஷோபாவை காப்பாற்றும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.