பிரசவத்திற்காக மனைவியை தோளில் தூக்கி சென்ற கணவர் ..!! பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்த சம்பவம் .. பின்னணி என்ன .???.

கர்பிணி பெண்ணை பிரசவத்திற்காக தூக்கி செல்வது இது இரண்டாவது முறையாக நடந்து உள்ளது அதுவும் ஒடிசா மாநிலத்தில் . இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் அஜாக்கிரதை தான். மேலும் அந்த பகுதியில் வாழும் பொதுமக்களின் சுற்றுசூழலை கருத்தில் கொண்டு அரசு பொறுப்புடன் இருக்கவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள் ஆகும் .

தற்பொழுது ஒடிசா மாவட்டத்தில் தனது கர்பிணி மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவர் தோள்பட்டையில் சுமன்று சென்று வேகமாக ஓடும் காட்சி அங்கு பார்த்தவர்களை பதறவைத்தது. ஒடிசா மாவட்டம் கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் சம்பாரு பிரஷக் மற்றும் பங்காரி பிரஷ்க் என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். மனைவி பங்காரி பிரஷ்க்கு இது தலைபிரசவம் .

அவருக்கு நேற்று திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டது அதனால் 108 ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் மனைவியின் வேதனையை தாங்க முடியாத கணவர் கண்ணீர் விட்டு கர்பவதியை தான் தோள்பட்டையில் தூக்கி வைத்து கொண்டு திட்ட திட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வேகமாக நடந்து சென்றார். இந்த காட்சியை வழியில் பார்த்த பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்தனர்.

அவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்ற பிறகு அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்து அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின் கர்ப்பிணியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை பதறவைத்தது. இதே போல் சில மாதங்களுக்கு முன்னர் 108 ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை இரும்பு கம்பியில் தூளிகட்டி அதனுள் படுக்கவைத்து உறவினர்கள் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இரண்டாவது முறையாகும்.