உலகிலேய மிக கொடுமையான சம்பவம் இது ..!! திருமணம் முடிந்த சில நொடிகளில் அனைவர் கண்முன் சடலமாக கிடந்த இளம் தம்பதியர்கள்..!!!

திருமணம் நடந்த சில நொடிகளில் பெற்றோருக்கு மற்றும் உறவினர்கள் முன்பு கொடூரமான முறையில் இறந்த தம்பதியர்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (வயது 19). இவரது காதலி பவுட்ரியாக்ஸ் (20). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டு குடியிருப்புகளில் வசிப்பவர்கள் .சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளர்ந்து வந்தவர்கள் நட்பாக இருந்த பழக்கம் இறுதியில் காதலாக மாறி விட்டது .

அதனால் இருவரும் சில வருடங்களாக காதலித்து தற்பொழுது திருமணம் செய்து கொண்டு காதல் தம்பதிகளாக வாழ வேண்டும் என்று ஆசைபட்டு உள்ளனர். அதனால் நேற்று இவர்களுக்கு டெக்சாஸ் மாகாணத்தின் ஆரஞ்சு நகர கோர்ட்டில் நீதிபதியின் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு அவர்கள் திருமண பந்தத்தை பதிவு செய்து வெளிய வந்தனர் . அங்கு இருவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர். பின்பு இருவரையும் அழைத்து செல்ல அலங்காரத்துடன் நின்ற காரில் ஏறினார் .

அவர்கள் ஏறின அடுத்த நிமிடமே அதி வேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் அமர்ந்து இருந்த காரினை வேகமாக இழுத்து சென்றது . அதில் தம்பதியர்கள் இருந்த கார் 4 முறை தரம் புரண்டு இழுத்து சென்று ஒரு புதருக்குள் தள்ளியது . அந்த கார் மிகவும் மோசமாக நொறுங்கியது . இதில் அந்த காரில் இருந்த தம்பதியர் இருவருமே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். இந்த கோரசம்பவம் அங்கிருந்த அனைவர் முன்னிலையில் நடந்ததால் அனைவருமே ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டனர்.

அவர்களின் திருமணம் நடந்து முடிந்து ஒரு 5 நிமிடம் கூட ஆகவில்லை இருவருமே சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. .இதனால் பெற்றோர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.