
தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்களுக்கு மேலாக நடித்தவர் தான் நடிகை ஷர்மிளா இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். இவர் முதலில் ஒருவரை திருமணம் செய்து அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் தாய் மற்றும் தன் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரை பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி வெளியானது இவர் உடல் நிலை சரில்லத்தால் அரசு மருத்துவமனையில் கேப்பாரின்றி இருந்து வருகிறார் என்று. இதற்க்கு நடிகை ஷர்மிளா கூறியது ஆம் உண்மை தான் சில வருடங்களுக்கு முன்னர் நான் மாடியில் இருந்து விழுந்து விட்டேன் அதன் காரணமாகாவே முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது பின்னர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆனால் சிலவருடங்கள் கழித்து தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது.
அதற்காக தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றேன் மேலும் என் தந்தையும் கடைசி காலத்தில் அங்கு தான் சிகிச்சை பெற்றுவந்தார் என்கிறார் நடிகை..