கொரோனா வைரஸால் என்னும் புதிய நோய் சீனாவில் கோர தாண்டவம் ஆடி வருகின்றது .அதனால் அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வரும் எந்த ஒரு சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அதனால் அந்த நாட்டில் இருக்கும் பொதுமக்கள் திணறிப்போய் உள்ளனர். மேலும் அந்த நாட்டிற்கு வேலை செய்ய போயிருக்கும் பிறநாட்டு மக்கள் தங்களை காப்பாற்றி எங்கள் நாட்டிற்கு எங்களை அனுப்பிவிட மன்றாடி சோசியல் வலைதள பகுதியில் தங்களது கஷ்டங்களை கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த நோய் எப்படி வருகின்றது என்பது யாருக்கும் தெரியவில்லை . மேலும் சீனாவில் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 500கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் 20 பேர் பலியாகிவுள்ளனர். இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்துகள் கிடைக்கவில்லை மேலும் இது விலங்குகளில் இருந்து பரவுகிறது என்பதும் கேள்விகுறியாகி உள்ளது.

மேலும் எந்த விலங்கு என்பதும் சரிவர தெரியாத நிலையில் சீனா பெண் ஒருவர் சோசியல் வலைதள பகுதியில் வவ்வால் ஒன்று மனிதர்களின் உணவை உண்ணும் காட்சியை பதிவு செய்து உள்ளார் . இந்த வீடியோ காட்சிகள் இன்னும் சர்ச்சைக்குள்ளாக்கி அச்சத்தை ஏற்படுத்துகின்றது.