மனிதர்கள் மத்தியில் எப்படி ஒரு பாலினம் மற்றொரு பாலினத்தை கவர முயற்சிக்கிறதோ. அது போல் தான் விலங்குகள் இடத்திலும் சரி பறவைகள் இடத்திலும் சரி ஊடல் என்கிற ஒரு விஷயம் இருக்கும் .

அதுபோல் தான் தற்பொழுது ஒரு வீடியோ கட்சியில் தனது காதலனை கவர ஒரு பறவை மற்றொரு பறவையை வசீகரிக்கும் விதத்தில் நடனமாடும் காட்சி வைரலாக பரவி வருகிறது சோசியல் வலைத்தளங்களில்.

மார்பில் இளம்பச்சை வண்ணம் கொண்ட கருப்பு நிற பறவையொன்று மற்றொரு பறவையை வசீகரிக்க நடனமாடுகிறது. அதனை பார்த்த அந்த பறவையும் நடனமாடும் பறவையை பார்த்து அதனை சுற்றி சுற்றி வருகிறது .