திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி – பாக்கியலட்சுமி . இவர்களது மகன் சாய்குமார் 24 வயது . AC மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவர் வீட்டு அருகில் உள்ள ஏட்டு பாலகுமாரின் மகள் தீபிகாவை காதலித்து வருகிறார் கடந்த 6 வருடங்களாக . இந்த காதல் பாலகுமாருக்கு தெரிந்ததால் அவர் அங்குள்ள வீட்டை காளி செய்து விட்டு திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்துக்கு குடிபுகுந்தார். மேலும் அங்குள்ள ஒரு கல்லூரியில் மகள் படிக்கவைத்து கண்காணித்து வந்தார்.

ஆனால் தீபிகாவோ காதலன் சாய்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது தீபிகா 5 மாதம் கர்பமாக உள்ள நிலையில் சீமந்தத்திற்காக தனது சொந்த வீட்டிற்கு கணவர் சாய்க்குமாருடன் வந்துள்ளாள் தீபிகா. இந்த விஷயத்தை அறிந்த பாலகுமார் நான்கு பெயரை அழைத்து கொண்டு சாய்குமாரின் வீட்டிற்கு சென்று மகள் தீபிகாவிடம் தாயை வந்து ஒருமுறை பார்க்கும் படி அழைத்தார் . தீபிகா அதற்கு வரமறுத்ததால் கோவத்தில் மகள் என்று கூட பார்க்காமல் மறைத்து வைத்து இருந்த ஆசிட் முட்டையை எடுத்து மகள் தீபிகாவின் மீது வீசியுள்ளார்.

மேலும் அதனை தடுக்க வந்த மாமியார் மற்றும் சாய்குமாரின் தங்கை ஆகியோரின் மீதும் ஆசிட் முட்டைகளை வீசி விட்டு நான்குபேர் உதவியுடன் மகள் தீபிகாவை கடத்திக்கொண்டு காரில் சென்றனர். கொஞ்ச தூரம் சென்ற பின்பு நடு ரோட்டில் மகள் தீபிகாவை கீழே இறக்கி விட்டு சென்றனர். அதனை பார்த்த பொது மக்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பாலகுமாரிடம் விசாரணை துவங்கப்பட்டது,.