இந்தியாவில் உத்தரப்பிரதேஷத்தில் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில் வசிப்பவர்கள் ஒரு வீடு கடந்த நான்கு நாட்களாக பூட்டிய நிலைமையில் உள்ளது. ஆனால் தற்பொழுது அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி கொண்டு இருக்கிறது என்று பலர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் காவல் துறைக்கு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பமே சடலமாக அழுகிவரும் நிலையில் துறுநாற்றம் வீசியபடி கிடந்தது.

அதனை பார்த்த போலீசார் உடனே அந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சடலங்க யார் என்பது கண்டு பிடிக்க பட்டது. அந்த வீட்டில் வாழ்ந்த ஷியாமா மற்றும் அவரது நான்கு மகள்கள் பிங்கி, பிரியங்கா, நாங்கி, வர்ஷா என்பது தெரியவந்தது. அந்த வீட்டில் ஷியாமாவின் கணவர் மது அருந்திவிட்டு அவர்களிடம் தினமும் தகராறில் ஈடுபடுவர் என்று தெரியவந்தது.

அதுபோல் தான் கடந்த நான்கு நாட்கள் முன்பு அவர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி ஷியாமாவிடம் சண்டை போட்டு அடித்து உள்ளார். அதற்கு பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை . அதனால் சந்தேகத்தின் அடிப்படையில் தற்பொழுது இந்த 5 சாவிற்கு காரணமான தகப்பனை தேடி வருகிறார்கள்.