தமிழ் சினிமாவின் நக்கல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் பார்த்திபன் இவர் நடிகர் , இயக்குனர் , பாடகர் , தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் இவர் 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார் மேலும் 14க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவிற்க்கே தன்னை அர்பணித்துள்ளார். இவருடன் நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்போது சில காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்தது வருகிறார்கள். மேலும் தன்னன் தனியாக இருந்து தனது இரு மகள்களையும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பல தடைகளை தாண்டி வெற்றிபெற்றது அதேபோல் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இந்த நிலையில் பார்த்திபனின் நக்கல் பேச்சால் சிக்கலில் சிக்கி உள்ளார். சமீபத்தில் லிமிடெட் எடிசன் என்ற காலெண்டருக்காக தமிழ் நடிகைகளிடம் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது அதில் நடிகைகள் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிஸி பிரியதர்ஷன், ஷோபனா, நதியா , சமந்தா , ஸ்ருதிஹாசன் , ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளிடம் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.

அதில் நடிகை குஷ்பூவின் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் “தட்டில் பழங்களும்- உ தட்டில் தட்டுப்படும் புன்னகையும் சுவை ” என்று வர்ணித்து பதிவிட்டிருந்தார் இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் பார்த்திபனை கலைக்கும் வகையில் தட்டில் பழம் உ-தட்டில் ஊட்டப்படும் என்று நினைத்தேன் என்று போட்டிங்களோ பார்த்திபன் என்று கலாய்த்து வருகிறார்கள்