1980’களில் தமிழ் சினிமாவின் உச்சம். புகழ் பெற்ற முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு, அந்த காலக்கட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தொடர்ந்து புகழின் உச்சத்தில் இருந்துவந்தார். அதன் பின்னர் இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டும் நடித்துவந்தார்.

 

அதன் பின்னர் தற்போது சீரியல்களிலும் அவரின் நடிப்பை நிலைநாட்டி வருகிறார். மேலும் அரசியல் என்று எல்லாத்துறையிலும் தடம் பதித்து வருகிறார்.

 

அனைத்து துறையிலும் சிறப்பாக செயல் பட்டு வரும் நடிகை குஷ்புக்கு அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ப்பாக டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதனை தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இதே போல தான் சில நாட்களுக்கு முன் காமெடி நடிகை ஆர்த்தி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது.