தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகராக வந்தவர் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2017 யில் வெளிவந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனு இம்மானுவேல், வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஷால்– மிஸ்கின் கூட்டணி வெற்றி அடைந்ததை தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வருவதாக தகவல் சமீபத்தில் வெளிவந்தது. மேலும், இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்து, நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யாக உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. லண்டனில் கட்ட நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், திடீரென்று இந்த படத்தில் இருந்து மிஸ்கின் நீக்கபட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை மிஸ்கின் கூட உறுதி செய்த்திருந்தார்.மேலும், மிஸ்கின் தரப்பில் துப்பறிவாளன் படத்துக்கு 40 கோடி செலவாகும் என்று ஒரு புதிய பட்ஜெட் கணக்கை விஷாலிடம் ஒப்படைத்து இருந்தார் என்றும். அதுமட்டுமில்லாமல் மிஷ்கின் சம்பளத்தையும் அதிகமாக விஷால் இடம் கேட்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது

இதனால் விஷால் மிகவும் கோபம் அடைந்து உள்ளார் என்றும், உடனடியாக விஷால், மிஷ்கினுடன் சண்டை போட்டு துப்பறிவாளன் படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கினை அதிரடியாக நீக்கியுள்ளார் என்றும் இயக்குனர் மேலும், படத்தின் மீதி காட்சிகளையெல்லாம் விஷால் இயக்க முடிவு செய்து உள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக விஷாலிடம் மிஸ்கின் 15 கோரிக்கைகளை வைத்துள்ளார்.

அந்த கோரிக்கை கடிதத்தின் நகல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஜிஎஸ்டி இல்லாமல் 5 கோடி சம்பளம். ரீமேக் உரிமம், குறிப்பிட்ட நாளில் கோடி முடிக்க வில்லை என்றால் இயக்குனர் சொல்லும் வரை விஷால் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த காத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் யாரும் இயக்குனரை தொடர்பு கொள்ள முடியாது. விஷால் மட்டும்தான் ஒரே ஒரு தொடர்பு.

இயக்குனரின் போக்குவருத்து செலவுகளை தயாரிப்பாளர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது லண்டனில் பயன்படுத்தும் கார் உட்பட அனைத்து செலவையும் கொடுக்க வேண்டும். இயக்குனர் தான் படத்தின் லொகேஷனை கொடுக்க செய்வார் தயாரிப்பாளர்களுக்கு கூட அதனை மாற்ற உரிமை கிடையாது. படத்தின் பட்ஜெட்டில் இயக்குனர் கண்டிப்பாக பேரம் பேசமாட்டார் இருப்பினும் பணம் வீணாக்குவதை கண்டிப்பாக தவிர்ப்பார். இணை இயக்குனருக்கும் துணை இயக்குனருக்கும் மாதாமாதம் சம்பளம் வந்துவிட வேண்டும் அதுவும் சென்சார் வரும் வரை. இயக்குனர் மற்றும் அவர்களது துணை இயக்குனர்களுக்கும் இயக்குனர் விரும்பியபடி தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் அலுவலக வாடகை 66 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்பு செலவு அனைத்தையும் தயாரிப்பாளர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும் அதிலும் மின்சாரம் உணவு போன்ற இதர செலவுகளை கூட தயாரிப்பாளர் பொறுப்பேற்க வேண்டும்.

படத்தைப் பற்றிய அனைத்து விதமான தொடர்புகளும் ஈமெயில் தான் இருக்க வேண்டும். இயக்குனரின் சுதந்திரத்திற்கும் அல்லது இயக்குனரை அவமதித்தல் தவறாக பேசுதல் மிரட்டுதல் அல்லது மனரீதியான எந்த பேசுதல் தொல்லை இருந்தாலும் படத்தில் இருந்து இயக்குனர் விலகி விடுவார். மேற்கூறிய அனைத்தும் சம்மதம் என்றால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கையொப்பம் இட வேண்டும். மேற்கூறிய அனைத்து கட்டளைகளில் ஏதாவது ஒன்று தவறினால் கூட துப்பறிவாளன் படத்தில் இருந்து இயக்குனர் வெளியேறி விடுவார் என்று அந்த அறிக்கையில்