இன்று ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தேமுதிக கட்சியின் மாநில தொழிற் சங்க பேரவை துணை செயலாளர். வேணு ராம் அவர்களின் இல்லத் திருமண விழா தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தவிருந்தார்.

இந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அறிவைத்திருவித்திருந்தார். அதன்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள எளிய முறையில் இன்று நடந்தது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமணத்தில் அனைவருமே மாஸ்க் அணிந்திருந்தனர். அதுமட்டுமின்றி, கைகால்களை ,சுத்தம் செய்ய ஹேண்ட் சானிடைசரும் வழங்கப்பட்டது.

மிகவும் எளியமுறையில் திருமணம் நடந்த்திருந்தாலும் மணமக்களுக்கு விஜயகாந்த் மற்றும் பிரேமலதா வாழ்த்துகளை தெரிவித்தது மிகவும் சந்தோஷம் என நிர்வாகிகள் கூறிவந்தனர்.