கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுஅருகின்றது. இந்நிலையில் மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு செய்ய கேரள காவல்துறை வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், “இளைஞர் ஒருவரை கொரோனா வைரஸ் துரத்துவதால் பயந்து தலைதெறிக்க ஓடுகிறார். பின்னர் ஒடுவதை நிறுத்திவிட்டு கொரோனாவை எதிர்த்து தைரியமாக நிற்கிறார். அப்போது அவருக்கு பின்னால் போலீஸார் ஒருவரும் டாக்டர் ஒருவரும் உடன் உள்ளனர். பின்னர் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது அதில் இருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது.என்று இந்த வீடியோவில் நாம் அறியலாம்