உலக நாடுகளையும் அந்த நாட்டு மக்களையும் கடந்த மூன்று மாதங்களாக விடாமல் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவும் இதனிடம் இருந்து தப்பவில்லை.

             

இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 31 வரை சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்களும் அரசின் கோரிக்கையை ஏற்று வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் மேலும் அடிக்கடி கைகளை நன்கு சுத்தம் செய்து கொண்டே இருக்குமாறும்,முக கவசம் அணியுமாறும் பொது மக்களை, மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் அனைவரையும் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ் திரையுலகம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தல எனப்படும் நடிகர் அஜித், பில்லா படத்தில் கைகளை கழுவ வேண்டிய முறையில் கழுவும் காட்சிகளை தல ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ