கொரோனா வைரஸ் தற்போது உலக அரங்கில் ஒளித்து வரும் ஒரு அபாய சங்கு இந்த பெயரை கேட்டாலே சிலர் நடுங்குகிறனர். அந்த அளவிற்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் நடுங்க வைக்கிறது. இந்த வைரஸ் சீன நாட்டின் ஊஹான் மாநகரில் ஆரமித்து தற்போது அணைத்து பகுதியிலும் பரவி உள்ளது.நாம் அனைவரும் அறிந்ததே!

இது ஒரு வைரஸ் தொற்று நோய் இந்த நோய் ஆனது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கொரோனா தொற்றால் பாதிப்படைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைப் பற்றி விளக்கும் இந்த செய்தி கட்டுரையில் காண்போம்…. வாருங்கள் …..

பழ வகைகளில் ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசிப்பழம், பப்பாளி, கிவி, கொய்யாப்பழம், தக்காளி ஆகியவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவையாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

காய்கறிகளை பொறுத்தமட்டில் காரட், பீட்ரூட், கீற வகைகள், முட்டைக்கோஸ், காலிஃபளவர், கத்திரிக்காய், ப்ரோக்கோலி மற்றும் குடமிளகாய் முதலியவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இஞ்சி, மஞ்சள், பூண்டு, பாதாம், எலுமிச்சை, க்ரீன் டீ, வாதுமைக் கொட்டை (வால்நட்ஸ்) போன்றவையும் உட்கொள்ளலாம்.

 

நீர் ஆகாரங்களைப் பொறுத்தவரை சுகாதாரமான குடிநீர், இளநீர், க்ரீன் டீ, வைட்டமின் சி அடங்கிய பழச்சாறுகள், பால் மற்றும் மோர், தினமும் 2.5 லி முதல் 3 லிட்டர் வரை அருந்துவது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை மட்டும் இல்லாமல் முடிந்த வரை முககவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக கழுவுதல் மூலம் தடுக்கலாம்.

குறிப்பாக,மேலே குறிப்பிட்ட இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு வகைகளே அன்றி, கொரோனா வைரஸை தடுக்கும் உணவு வகைகள் அல்ல.