தம்பி நின்னு பேசும் மலட்டுத் தன்மையைப் போக்கும் கீழாநெல்லி – விவரம் உள்ளே

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் இந்த பழமொழிக்கு ஏற்ப,நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகள் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’.

இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது.

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்: மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

       
இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்.உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.ரத்தசோகையைச் சரிசெய்யும் .கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.மலட்டுத் தன்மையைப் போக்கும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.