கொரோனா வார்டில் வேலைசெய்யும் நர்ஸ் அம்மா..! – வீட்டுக்கு வாங்கன்னு, கதறி அழுத குழந்தை..! – நெஞ்சை உருவ வைக்கும் வீடியோ..!

கரோனா அனைவரையுமே ஒருவித பதட்டமன மனநிலைக்கு தள்ளியிருக்கிறது. நம் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இரவு, பகல் பார்க்காமல் செவிலியர்களும், மருத்துவர்களும் சிகிட்சை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் கோட்டயம் அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் சிகிட்சையளித்த ரேஷ்மா என்ற நர்ஸ்க்கு கரோனா தாக்கியது.

தொடர்ந்து 14 நாள் சிகிட்சைக்குப் பின் அவர் அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் கரோனா வார்டில் பணிசெய்யும் தன் அம்மாவை வீட்டுக்கு வரச்சொல்லி குழந்தை அழுத சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பால்கா பகுதியைச் சேர்ந்தவர் சுனந்தா(31) செவிலியராக உள்ளார். இவருக்கு மூன்றுவயதில் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யா என்னும் குழந்தைக்கு தாயான சுனந்தாவுக்கு கரோனா வார்டில் பணிசெய்ய போட்டிருந்தனர். இதனால் கடந்த 15 நாள்களாக வீட்டுக்கே செல்லாமல் கரோனா வார்டில் பணியில் இருந்தார் சுனந்தா.

இந்நிலையில் ஜஸ்வர்யா தன் அம்மாவைத்தேடி அழத் தொடங்கினாள்.  இதனைத் தொடர்ந்து சுனந்தா வேலை செய்யும் மருத்துவமனை வளாகத்துக்கு ஐஸ்வர்யாவை அவரது அப்பா அழைத்துச் சென்றார். கரோனா வார்டில் இருந்து வெளியே வந்த சுனந்தா தூரத்தில் இருந்தவாறு சமூக இடைவெளிவிட்டு மகளைப் பார்த்தார்.அம்மாவைப் பார்த்ததும் கதறியழுத குழந்தை ‘அம்மா வா வீட்டுக்குப் போகலாம்’ என கதறியது. அதைக் கேட்டு குழந்தையின் தாயும் கதறி அழுதார்.

அதை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர்.  குறித்த அந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே ஒருநிமிடம் பாருங்கள். நெஞ்சை உருக வைக்கிறது. தயவுசெய்து ஊரடங்கு முடியும்வரை வீட்டை விட்டு  வெளியே வராதீர்கள். அதுதான் நாம் இவர்களுக்கு செலுத்தும் நன்றி என்பதையும் நினைவில் கொள்வோம்.