தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக தனது ரசிகர்களின் பேர் ஆதரவினால் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் விரைவில் திரைக்கு வர உள்ள உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழில் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது. தெலுங்கில் உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு தமிழிலும் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் இயக்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து வரும் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். இந்நிலையில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் கனடாவில் இருக்கும் விஜய் மகனை நினைத்து அவரது குடும்பம் கவலையில் காணப்படுவதாக வெளியான செய்திகள் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்தது.

பின்பு அவ்வாறு கவலை எதுவும் இல்லையென்றும் மகனிடம் தினமும் விஜய் போனில் பேசிவருவதாகவும், அங்கு சஞ்சய் நன்றாகவே இருக்கின்றார் என்று விஜய் தரப்பு தகவல் வெளியானது.