இந்த பழக்கம் உள்ளவரா நீங்கள்..? – உடனே கைவிடுங்க..! – இல்லை என்றால் கொரோனா உங்களின் உயிரை பறிக்கும்..?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது ஹூக்கா பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அ பா யம் அதிகம் உள்ளது. ஏனெனில் பொதுவாக புகைப்பிடிப்பதால், அதில் உள்ள உட்பொருட்கள் நுரையீரலை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், இன்றே அதை கைவிடுங்கள்.

புகைப்பிடிப்பவர்களை எவ்வாறு தாக்கும்?
புகைப்பிடிப்பவர்கள் கொரோனா வைரஸிற்கு அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடும். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, விரல்கள் அசுத்தமான சிகரெட்டுகளைப் பிடித்து உதடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால், கொடிய வைரஸை கையில் இருந்து வாய்க்கு பரப்புவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்பனவே நுரையீரல் நோய் அல்லது நுரையீரல் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கலாம் என்பதால், கொரோனா வைரஸ் தாக்கினால் அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

சிகரெட் அல்லது புகைப்பிடிப்பது ஒரு கெட்ட பழக்கம் என்பதால், இதைக் கைவிட யோசிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைவில் கொண்டாவது, இந்த கெட்ட பழக்கத்தை உடனே கைவிட முயற்சி செய்யுங்கள். ஆதாரம் இல்லை இருப்பினும், புகைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக சுவாசக்குழாய் தொற்றுநோய்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவர். ஆனால் கொரோனா வைரஸிற்கு புகைப்பிடிப்பவர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனினும், இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு நிச்சயம் நுரையீரல் செயல்பாடு மோ சமாக இருக்கும் என்பதால்,

இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றின் அபாயமும் இருக்கலாம். எனவே தற்போது நாம் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் உள்ளோம். இதைப் பயன்படுத்தி, புகைப்பிடிக்கும் கெட்ட பழக்கத்தைக் கைவிட முயற்சித்து, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.