சிங்கிள் கப் டீ-யின் விலை ரூ,13,800 ..! – உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் இலங்கை தேயிலை..! – இந்த அப்படி டீ-யில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை கேள்விப்படுகிறோம் அல்லவே. அதே போன்று ஒரு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் தான் இது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பக்கத்தில் உள்ள ரூபென்ஸ் என்ற ஓட்டலில் தான் லண்டனிலேயே (ஏன் உலகத்துலயே கூட) காஸ்ட்லியான டீயை விற்பனை செய்வதாக சொல்கிறார்கள். அதாவது 200 டாலரில் விற்பனை செய்கிறார்கள். இந்திய மதிப்பில் சிங்கிள் டீ 13 ஆயிரத்து 800 ரூபாய் என்கிறார்கள்.

 

அப்படி அந்த டீயில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால், அபூர்வமான வெள்ளை நிற குடுவையில் தருகிறார்கள்.அந்த ஒரு வெள்ளை குடுவை அருந்தும் டீ கப்பு 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டதாம். இங்கு நம் பயன்படுத்தும் வழக்கமான டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த சுவைக்கு அடிமையான லண்டன்வாசிகள் காசை பற்றி கவலைப்படாமல் வந்து அடிக்கடி டீ சாப்பிட்டு செல்கிறார்கள்.உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அப்படி என்ன தான் டீயில் இருக்கிறது என்று எண்ணி பருக தொடங்கினர்.

இந்த டீ அவர்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லண்டன் வந்தால் ஜாலியாக இங்கு வந்து டீ சாப்பிட்டு செல்கிறார்கள். ஒருமுறை டீ சாப்பிட்டால் அடுத்து எப்போது சாப்பிடுவோம் என்ற ஆர்வத்தை இந்த டீ தூண்டுகிறதாம்.