தன் நகைச்சுவைத்திறனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் தன் வசம் ஈர்த்த காமெடியன் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவைப் போல் மேனரிசம் செய்து பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர். விஜய் டிவியின் மூலம் வடிவேலு பாலாஜி புகழின் உச்சத்துக்கே சென்றவர். அவரது இ றப்பு அனைத்துத் தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மா ரடைப்பும், வாதமும் சேர்ந்து தாக்க சிகிட்சையில் இருந்தவர் உ யிர் இ ழந்திருக்கிறார். அவரது குழந்தைகளின் கல்விச்செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று இருக்கிறர். நடிகர் விஜய் சேதுபதியும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு உதவியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றிய கலைஞர்கள் பலரும் அவருக்கு அ ஞ்சலி செலுத்தி வீடியோ பகிர்ந்தனர்.

இந்நிலையில் வாழ்க்கை குறித்து வடிவேல் பாலாஜி வெளியிட்ட வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன் ம ரணத்தை முன்னரே யூகித்தவராக பேசுகிறார். அதில் அவர், ‘’எதை நீ வரும்போது எடுத்துட்டு வந்தியோ…போகும்போது எதையும் எடுத்துட்டு போறதில்ல. இதுதான் உண்மை. வரும்போது என்னத்தை எடுத்துட்டு வந்தோம். போகும்போது என்னத்த கொண்டு போகப் போறோம். ஒன்னும் இல்ல!

இறப்பு..பிறப்பு..நடுவுல கொஞ்சம் கேப்பு! கேப்புல சந்தோசமா இருங்க. அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பாருங்க. சரியா? இதுல என்ன நீ பெரிய ஆள்? நான் பெரிய ஆள்? ’’எனப் பக்குவமாகப் பேசுகிறார். அது நம்மை உ ருக வைக்கிறது.