ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா(26). பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், அதன் பின் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு மேற்படிப்பை நல்ல படியாக முடித்த இவருக்கு, நல்ல வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகள் படித்து முடித்துவிட்டு, நல்ல வேலையில் இருப்பதால், கமலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர்.

அதன் படி கமால் ஆசைபட்டது போன்றே அவருக்கு பிடித்தமாதிரி நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் கமால் இருந்துள்ளார்.

இந்நிலையில், அ டிலா ண்டாவில் உள்ள உறவினர்கள் கமலாவை அவரது வீட்டிற்கு அ ழைத்து ள்ளனர். இதனால் கமலா தன்னுடைய வருங்கால கணவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது வரும் வழியில், இருந்த பால்ட் ரிவர் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் நன்றாக சென்று கொண்டிருப்பதை பார்த்து, இருவரும் காரில் இருந்து இ ற ங்கி நீர் வீழ்ச்சி அருகே நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் கால் ச று க்கி நீர் விழ்ச்சிக்குள் வி ழுந் ததா ல், கமலா ப ரி தா ப மாக நீரில் மூ ழ்கி உ யிரி ழந்தார்.

சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மீ ட்புப் ப டை யின ருடன் பொலிசார் வந்த நிலையில், நீர் வீழ்ச்சியில் உயிருக்கு போ ரா டிக் கொண்டிருந்த கமலாவின் வருங்கால கணவரை கா ப்பா ற்றியு ள்ளனர்.

ஆனால் கமலா மட்டும் உ யிரி ழந்து விட்டதால், அவரின் பா டியை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.