சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருந்தார்.

இவர் உடல்நலக் கோளாறு காரணமாக சி கிச் சை ப லனி ன்றி கடந்த 10ம் திகதி ம ரணம டைந்தார். இவரின் மறைவினால் இன்னும் மீளாமல் அவருடன், இருந்த கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள், குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல டிவியில் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற நிகழ்ச்சியினை வரும் 4ம் திகதி ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில் இதற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் தனது கவலைகளை எல்லாம் மனதில் மறைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்ததை இன்னும் மறக்கமுடியாமல், கண்ணீர் சிந்திய கலைஞர்கள் மட்டுமின்றி நம்மையும் கலங்கவே வைத்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ