ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை.

இத்தகைய இசைக்கு அடிப்படையானவை இசைககருவிகளாகும். பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும் பெயர்களோடும் நாம் பயன்படுத்திவருகிறோம்.

புகழ்பெற்ற மங்கல இசை கருவிகள் பல உண்டு. அது இசைக்கலை உலகிற்கு அளப்பரிய சேவைகள் செய்துள்ளது.

உலகமெங்கும் சென்று நமது இசை கலையை பரப்பி வெற்றி பெறவும் செய்துள்ளது. அந்த கருவிகளின் வரிசையில் தவில் இசைக்கருவிக்கு தனி இடம் உண்டு.

அதனை முறைப்படி கற்ற பெருமை ஜனனேஸ்வரி சந்திரசேகரன் என்ற தமிழ் பெண்ணை சேரும். அவர் தவில் வாசிப்பதை பார்த்தால் ஆண்களே தேற்றுவிடுவார்கள் போல இருக்கின்றது.