குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என சொல்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை தனது அன்பு, அழகான குண நலத்தால் தன் தந்தையையே திருத்தி இருக்கிறது. இதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

லாக்டவுண் முடிந்து முதன் முதலாக டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்த நேரம் அது. நான்கு வயதே ஆன குட்டிக்குழந்தையை வீட்டில் வைத்திருக்கும் தந்தை கொரோனாவால் வேலையும் இழந்துவிட்டார்.

இப்படியான சூழலில் வீட்டில் வருமானத்துக்கே வழி இல்லாமல் கஷ்ட நிலையில் இருக்கின்றது குடும்பம். இப்படியான சூழலில் டாஸ்மாக் கடை திறக்கப்பட மனைவியிடம் போய் கணவர் நீண்ட நாள்களுக்குப் பின் கடை திறந்து இருக்காங்க…ஏதாவது பணம் இருக்கா எனக் கேட்கிறார். அதற்கு உடனே மனைவி வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை எனக் சொல்கிறார். இதைக்கேட்ட அவரது மகள் நேராக போய் தன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த காசை எடுத்து நீட்டுகிறாள்.

இதோ இதில் நீ ஆசைப்பட்ட பொருளை வாங்கிக்க அப்பா என கொடுக்கிறாள். அதை வாங்கிவிட்டு டாஸ்மாக் கடை நோக்கி நகர்ந்த அப்பா, கடைக்கு பக்கத்தில் போனதும் மகள் உண்டியலில் காசை சேர்ந்த நினைவு வர பிஸ்கட்,

சாக்லேட் என வாங்கிவிட்டு குடிக்காமல் வீடு வருகிறார்.சின்ன ஒரு செயலால் தன் தந்தையின் மனதை மாற்றிவிட்ட இந்த குட்டி தேவதையின் வீடியோவைப் பாருங்க…உருகிடுவீங்க…