மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றல் அது ஸ்டார் விஜய் தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலம் அதிலும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு காதலை வெளியே முதன்முதலில் கூறுவது ஆண்கள் தான் என்றில்லை பெண்களும் கூறலாம் என்று விவாதிக்கப்படுகிறது. அவ்வாறு அரங்கத்தில் வைத்து காதலை வெளிப்படுத்திய பெண்களின் ரியாக்ஷனைப் பார்த்த கோபிநாத்தின் ரியாக்ஷன் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.