தமிழகத்தில், விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மா.யமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கும், குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஷிஷன்சிங் (9),ஷைஷா (6) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணம் ஆன, சிறிது நாட்களிலே மாமனாரின் வீட்டிற்கு சென்ற போது, அவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கடந்த 6-ஆம் திகதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்று உள்ளார். அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம், வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி அ.டி.த்.து.ள்.ள.ன.ர்.

மனம் உடைந்த ஜினிகுமார் வீட்டில் வந்து தந்தையிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார் இரவு தூங்க சென்ற பின் காலையில் மகனை வீட்டில் தேடிய பிறகு காணவில்லை. மகனின் அறையில் சென்று பார்த்தபோது 22 பக்க கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் நிறைய குடும்ப விஷயங்களை குறிப்பிட்டுள்ள ஜினிகுமார், கடந்த 6-ஆம் திகதி நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், கடந்த 6-ஆம் திகதி குமரி மாவட்டம் நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றேன்.

அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி செருப்பால் அ.டி.த்.து அவமானப்படுத்தினர். இதனால், தான் வாழ்கையை முடித்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு மா.யமாகியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் தனது சொத்துக்கு தந்தைக்கே சட்டபூர்வ உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.