பிக்பாஸ் டைட்டில் ஆரிக்குத்தான் என பல ரசிர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார். இவர் ஆரி நடித்த “நெடுஞ்சாலை” “உன்னோடு கா” படத்திற்கும் இசையமைத்தவர். தற்போது இந்தக் கூட்டணி “அலேகா“ படத்திலும் தொடருகிறது. நட்பு அடிப்படையில் சி.சத்யா “ஆரி வேற மாறி“ என்ற பாடலை நேற்று வெளியிட்டு உள்ளார். “தனியொரு ஆளாய் சென்றாய் அங்கே, தனக்கொரு பேரை வென்றாய் இங்கே..“ எனத் தொடங்கும் அந்தப் பாடல் “நேர்மை என்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி… நீ வருவாய் வாகைசூடி” என்ற ஹைலட்டோடு இருக்கிறது. வீடியோ இதோ…