பல கோடிகள் மதிப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை வீட்டை இடித்து தள்ளும் நிலைக்கு கோடீஸ்வரர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.

பிரஞ்ச் மொழி பேசும் நாடான Monacoவில் தான் chateau எனப்படும் இந்த பிரம்மாண்ட அரண்மனை அமைந்துள்ளது.

கடந்த 2005ல் இருந்து 2009 காலக்கட்டத்தில் பிரித்தானிய கோடீஸ்வரரான Patrick Diter இதை கட்டினார்.

18 படுக்கையறைகள் கொண்ட இந்த வீடு 32,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு $70 மில்லியன் ஆகும்.

17 ஏக்கர் தோட்டம், பிரம்மாண்ட நீச்சல் குளம், 2 ஹெலிபேட்கள் என பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு வசதிகள் இங்கு உள்ளன.

இந்த நிலையில் இந்த பிரம்மாண்ட வீடானது சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இதை முழுவதுமாக இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அடுத்த 18 மாதங்களில் முழுவதுமாக இடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Patrick இந்த கட்டிடத்தை கட்ட முதலில் அனுமதி வாங்கியுள்ளார்.

ஆனால் வாய்மொழியாக அனுமதி பெற்றாரே தவிர அதிகாரபூர்வமாக எழுத்தின் மூலம் அனுமதி பெறாமல் விட்டதே அவருக்கு பெரும் சோதனையாக தற்போது அமைந்துவிட்டது.

ஜூன் 2022க்கு பிறகும் இந்த வீடு இடிக்கப்படாமல் இருந்தால் Patrick தினமும் $600 தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.

அதாவது ஆண்டுக்கு $220,000க்கு மேல் பணம் செலுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.