குழந்தைகள் எப்போதுமே அழகானவர்கள். கருப்பு, வெள்ளை என நிறங்களைக் கடந்து குழந்தை என்றாலே அழகுதான். அதனால் மழலைக் குழந்தைகள் செய்யும் குறும்புகளை எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். குழந்தைகள் கோபப்பட்டாலும் நம்மால் வெகுவாக அதை ரசிக்க முடியும். அதனால் தான் விளையாட்டாக குழந்தைகளிடம் பலரும் கோபப்படுவார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு தாய் தன் செல்ல மகளிடம் விளையாட்டிற்காக கோபப்படுகிறார். பதிலுக்கு அந்தக் குழந்தையும் தாயிடம் படு சீரியஸாக கோபப்பட்டது போல் தனக்குத் தெரிந்த மழலை மொழியில் குரல் உயர்த்திப் பேசுகிறது. இதோ இந்த வீடியோ இணையத்தில் இப்போது செம வைரல் ஆகிவருகிறது. தன் தாயிடம் அந்த செல்லக் குட்டிதேவதை சண்டைபோடும் காட்சியை இதோ இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.