வட இந்தியாவில் பிராங் ஷோவுக்காக பேய் வேசம் போட்டு சாலையில் பயமுறுத்திய வாலிபரை, ஒருவர் நைய்யப்புடைத்துள்ளார். சாலையில், பிராங் ஷோவுக்காக பேய் வேசத்தில் இருந்தார் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்த ஒருவரை பயமுறுத்தும் நோக்கத்தில் பேய் வேசத்தில் இளைஞர் ஒருவர் குத்தவைத்து அமர்ந்து இருந்தார். இந்நிலையில் அந்த பைக்கில் வந்த வாலிபர் பயப்படாமல் வாகனத்தை நிறுத்தி இறங்கி பேய் வேடத்தில் இருந்தவரை அடி வெளுத்து வாங்கிவிட்டார். கடைசியில் கேமராமேன் உள்பட மறைந்திருந்த மொத்த யூனிட்டும் ஒடிவந்து பேய் வேசம் போட்டவரை மீட்டது. பேய் வேடத்தில் அடிக்கும் பயந்து அந்த இளைஞர் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.