சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு திருமணம் நடந்து வருகின்றன. அவர்கள் சினிமா அல்லாத மற்ற துறை சார்ந்தவர்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள் மக்களின் ஆதரவை பெற்ற முக்கிய சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா.

இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியனும் சீக்கிரம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாக அதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதே போல அந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த தனலெட்சுமி என்பவருக்கு கடந்த வருடம் காதலனுடன் திருமணம் நிகழ்ந்தது.

இப்போது அந்த சீரியலில் நடித்து வந்த வைஷ்ணவி ஜெய் என்பவருக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)