குடும்பம் சூழ் வாழ்க்கை அழகு. அதேநேரம் அம்மா, அப்பா, அண்ணன் என உறவுகளின் தயவு இன்றி நாற்பது வயதுக்கு உள்ளேயே சொந்தக்காலில் நிற்க வேண்டும்.

புது இடம் புது வானம் தேடிப் போவோமே என அஜித் என்னை அறிந்தால் படத்தில் பயணிப்பது போல ஒரு பயணம் வசப்பட வேண்டும். குறைந்த பட்சம் மலேசியா, சிங்கப்பூர் என்றாவது சுற்றி பார்த்துவிட வேண்டும்.

நாற்பது வரை நகர்த்தாமல் முப்பதுக்கு உள் தனக்குப் பிடித்த துறையை முப்பதுக்கு உள்ளே தேர்வு செய்துவிட வேண்டும்.

முப்பதுக்கு உள் ஒரு தோல்வியை எனும் சந்தித்திருக்க வேண்டும். அது நமக்கு பக்குவத்தைக் கொடுக்கும். எதிர்காலம் குறித்த அச்சத்தை விலக்கும். சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

முப்பது வயதுக்கு உள்ளேயே உங்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும். நாற்பது வயதில் மிஷ்டர் க்ளீன் ஆகிவிட வேண்டும்.

உண்மையான நட்பு ஒன்று வைத்திருக்க வேண்டும். பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி விட வேண்டும். அடுத்த தலைமுறைக்கான சேமிப்பு உங்கள் கையில் இருக்க வேண்டும். மனிதர்களை பொன் போன்று மதிக்கத் தெரிய வேண்டும். கை தேர்ந்தவர் என பெயர் எடுக்க வேண்டும்.

எதையும் ஆலோசித்து செயல்படும் ஆற்றலை பெற்று இருக்க வேண்டும். பணியிடத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். படிப்பினால் ஒரு இடத்தை இந்த வயதுக்கு உள் அடைந்து இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் நீங்கலாக இருங்கள்… இத்தனையும் நாற்பது வயதுக்கு உள்ளேயே அடைந்துவிட்டால் நீங்களும் யோகக்காரர் தான்…