சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34).

இவர்களுக்கு தீபஸ்ரீ (14) என்ற மகளும், வசந்த் (10) என்ற மகனும் உள்ளனர். காலையில் பேக்கரிக்கு செல்லும் முத்து தினமும் மதிய வேளையில் மனைவி விஜயலட்சுமியை கடையில் வியாபாரம் பார்க்க அனுப்பி விடுவார்.

பின்னர், வீட்டில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலை கடைக்கு வருவது வழக்கம். இதே போல, கடந்த 14ந்தேதி விஜயலட்சுமி கடைக்கு அனுப்பி விட்டு, முத்து வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். வழக்கம் போல் மாலை மீண்டும் கடைக்கு சென்றவர். வியாபாரம் முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, மனைவி விஜயலட்சுமி, தினமும் என்னை மதிய வேளையில் கடைக்கு அனுப்பி விட்டு, நீ வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய், என முத்துவிடம் கேட்டுள்ளார். இதில், கணவன் மனைவிக்கு இடையே த.க.ரா.று ஏற்பட்டு வாய்த்தகறாராக மாறியுள்ளது. இதனால் ஆ.த்.தி.ரமடைந்த முத்து, விஜயலட்சுமியை முகம் தலையில் ச.ர.மாரியாக அடித்துள்ளார். இதில் அவர், வா.ந்தி எடுத்து ம.ய.ங்கி வி.ழு.ந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து போது, விஜயலட்சுமிக்கு மூ.ளையில் ர.த்த க.சிவு ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை ப.ல.னின்றி நேற்று இரவு விஜயலட்சுமி பரிதாபமாக உ.யி.ரிழந்தார். இதுகுறித்து உறவினர் சித்ரா என்பவர் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து முத்துவை கை.து செய்து வி.சாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சி.றையில் அடைத்தனர்.

கணவன் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்த இவர்களின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இவ்வளவு பெரிய சோ.க.ம் அப்பகுதியில் பெரும் ப.ரப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.