பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த ஷோவானது மற்ற மொழி சினிமா துறைகளில் பெரும் வரவேற்பை பற்ற நிகழ்ச்கியாக இருந்து வருகிறது.மேலும் அந்த மொழிகளில் அந்த சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் அதை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலக நாயகன் கமல்ஹாசன்.இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதால் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இதில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நூறு நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்து அதில் யார் வெற்றியாளர் என மக்களை தேர்ந்தெடுக்க செய்கிறார்கள்.

அதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை பிந்து மாதவி.இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பிந்து மாதவி அவர்கள் தமிழ் சினிமாவில் பொக்கிஷம் மூலம் அறிமுகம் ஆகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இவர் பிறகு படிபடியாக படங்களில் நடிக்க ஆரமித்து தற்போது பல படங்களில் நடித்து பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றிருப்பவர் நடிகை பிந்து மாதவி. இவர் நடித்த சில படங்கள் நல்ல ரீச்சை கொடுத்துள்ளது. அதோடு இவர் தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஆரவ் 3 பேரும் நிகழ்ச்சியின் இறுதியில் நண்பர்களாக போட்ட அட்டகாசம் எல்லாம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.அந்நிகழ்ச்சிக்கு பிறகு பிந்து மாதவி பெரிய அளவில் வலம் வருவார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இப்படி படங்களில் நடித்துள்ள பிந்து மாதவி சன் தொலைக்காட்சியின் மகள் என்ற சீரியலில் நடித்துள்ளாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் தற்போது அந்த சீரியல் பற்றி தெரிந்துகொண்டு வருகிறார்கள்.