பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ராஜீவ் மேனன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. ’The Last Hurrah’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் ஹிந்தியில் உருவாக உள்ளது என்று கூறப்படுவது.

மேலும், நடிகை ரேவதியின் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் நடிகை கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் வி டும் வகையில் பச்சை நிற ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கஜோல் அவர்கள் இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)