தமிழ் குத்து பாடல்களில், சிறுக்கி சிரிச்சு வந்தா பாடல் மறக்க முடியாத பால் என்று சொல்லலாம், இயக்குனர் சரண் இயக்கி கமல்ஹாசன், சினேகா, பிரபு உள்பட பலரும் நடித்து மெகா ஹி ட்டான படம் தான் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்த படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அ டித்தது. இந்த பாடலுக்கு ஆடியவர் தான் ரகசியா. அம்மணி நீண்ட இடைவெளிக்குப் பின்பு மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், ‘ஹீரோயினாவே அறிமுகம் ஆகியிருக்கலாம்.

ஆனால் நான் தமிழில் அறிமுகம் ஆறதுக்கு முன்னாடியே இந்தியில் பாம்பே டூ கோவா படத்தில் வெயிட்டான ரோல் தான் செஞ்சேன். அந்த படத்தில் சனா கான் ஐயிட்டம் டேன்ஸ் ஆடுனாங்க. இப்போ லைப் ஒரு சர்க்கிள்ன்னு சொல்லுற மாதிரி, நான் ஐயிட்டம் டேன்ஸ் ஆடிட்டு இருக்கேன். சனா கான் ஹீரோயினா ஆயிட்டாங்க. சென்னையில் ஒரு ஸ்டேஜ் ஷோவுக்கு வந்திருந்தப்போ, என்னைப் பார்த்த சுந்தர் சி, ஹீரோயினியா நடிக்குறியான்னு கேட்டாரு. காலேஜ் படிப்பு முடியாததால மறுத்துட்டேன்.

முதலில் பாக்கெட் மணி கிடைக்குதேன்னு தான் ஐயிட்டம் டேன்ஸ் ஆட ஆரம்பிச்சேன். இப்போ ஹீரோயினே ஆடிவிடுவதால் ஐயிட்டம் டேன்ஸ்க்கு வேலை இல்லை. இப்போ ஸ்டேஜ் ஷோக்களில் தான் ஆடி வருகிறேன். இதேபோல் ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிட்சைக்கு உதவ ஒரு அறக்கட்டளையும் நடத்திட்டு இருக்கேன்.’ என்று சொல்லும் இவர் தமிழில் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.